குமாரபாளையத்தில் கரும்பு லோடு லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் சிக்னல் லைட் இல்லாமல் நின்ற கரும்பு லோடு லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கரும்பு லோடு லாரி வடிகாலில் கவிழ்ந்தது.
Latest Accident News-குமாரபாளையத்தில் சிக்னல் லைட் இல்லாமல் நின்ற கரும்பு லோடு லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேசம், ராஜ்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 25. இவர் கடலை எண்ணை லோடு ஏற்றியவாறு கோவை நோக்கி சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் நேற்று அதிகாலை 01:40 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் ஓரமாக எவ்வித சிக்னலும் போடாமல் கரும்பு லோடு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இரவில் லாரி நிற்பது தெரியாமல், எண்ணை லோடு லாரி கரும்பு லோடு லாரியின் மீது மோதியதில், லாரி ஓட்டுனர் ஸ்ரீநாத் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
பலத்த சேதமடைந்த நிலையில் ஓட்டுனரை வெளியே எடுக்க முடியாததால், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் வந்து போராடி ஓட்டுனரை வெளியே தூக்கி வந்தனர். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கரும்பு லோடு லாரியில் தூங்கி கொண்டிருந்த ஓட்டுனர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சிருவன்கூர் பகுதியினை சேர்ந்த செல்வம், 30, என்பவரும் காயமடைந்ததால் இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் நகரின் பல இடங்களில் மது அனுமதி இல்லாமல் விற்கப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பல இடங்களில் ஆய்வு செய்தனர். கோட்டைமேடு காசி கவுண்டர் ஓட்டலில் சிதம்பரம், 54, என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், அருவங்காடு பகுதியில் பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும், சிதம்பரம், 54, நந்தகுமார், 32, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையத்தில் செக் மோசடி வழக்கில் ஒருவர் கைது
குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 59. இவர் தொழில் தொடர்பாக குமாரபாளையம் தெற்கு காலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு, 2006ல், 6 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்ததாக தெரிகிறது. வங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளது. இதனால் இது குறித்து நீதிமன்றத்தில் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். நீதி மன்ற உத்திரவின்படி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. முருகேசன், பயிற்சி எஸ்.ஐ. ஐசக் பத்மநாபன் உள்ளிட்ட போலீசார் நடராஜனை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற விற்ற 5 பேர் கைது
மிலாடி நபியையொட்டி டாஸ்மாக் கடைகள் விடுமுறை விட்டதையடுத்து, நகரின் பல இடங்களில் மது அனுமதி இல்லாமல் விற்கப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பல இடங்களில் ஆய்வு செய்தனர். ஆனங்கூர் பிரிவு, அருவங்காடு ஹை டெக் பார்க் அருகில், வட்டமலை, எதிர்மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு செய்ததில், ராஜா, 30, குமார், 42, காளீஸ்வரன், 26, இளங்கோ, 44, ஆகியோர் மது பாட்டில்கள் விற்றதாக வழக்குபதிவு செய்து 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஸ்கர், 29, என்பவரிடம் ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகள் இரண்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.கையும் களவுமாக பிடிபட்ட ஈரோடு ரமேஷ், 25, பள்ளிபாளையம் தினேஷ்குமார், 30, குமாரபாளையம் வெங்கடேசன், 34, ஈஸ்வரமூர்த்தி, 36, அல்லிமுத்து, 57, ஆகிய 5 பேர்களிடம் 5 டச் மொபைல் போன்களும், தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன், 77, என்ற முதியவரிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் 252ம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதையடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகள் உத்திரவின் பேரில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு குற்றாவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu