குமாரபாளையத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியன், 70. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 05:30 மணிக்கு சேலம் கோவை புறவழிச்சாலையில் ஓரமாக நடந்து சென்ற போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த பதிவு எண் தெரியாத டூவீலர் ஓட்டுனர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் பிரேமா, 44. தறி ஓட்டும் கூலி. இவர் கல்லங்காட்டுவலசு பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று 05:00 மணியளவில் நடந்து சென்ற போது, இவருக்கு எதிராக வேகமாக வந்த ஸ்கூட்டி பெப் வாகன ஓட்டுனர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்கூட்டி பெப் வண்டியில் வந்த கட்டுமான தொழிலாளி ஆனங்கூரை சேர்ந்த பெரியசாமி, 42, என்ற நபரை பிடித்தும், இந்த இரு வழக்குகளையும் பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது