குமாரபாளையத்தில் சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்து இருவர் படுகாயம்

குமாரபாளையத்தில் சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்து இருவர் படுகாயம்
X

குமாரபாளையத்தில் சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்து இருவர் படுகாயமடைந்த சம்பவ இடத்தை வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் விசாரணை செய்தார்.

குமாரபாளையத்தில் சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்து இருவர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள சிமெண்ட் அட்டை போடப்பட்ட ஒரு வீட்டின் மேற்கூரை பகுதியில் ரமேஷ், 35, திருமூர்த்தி, 40, சேதமான சிமெண்ட் அட்டைகளை மராமத்து பணிகள் செய்து கொண்டு இருந்தனர்.

பழைய அட்டை என்பதாலும், மழையில் ஊறி இருந்ததாலும் அட்டைகள் உடைந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காலில் பலத்த அடிபட்டது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வி.ஏ.ஒ. ஜனார்த்தனன் நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai as the future