தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கல்லால் தாக்கி கொலை!
தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கல்லால் தாக்கி கொலை
குமாரபாளையம் அருகே வெப்படை தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்கள் தங்கி இருந்த நிறுவனத்தின் விடுதிகளில் போலீசார் தீவிர விசாரணை. மேலும் நமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே வெப்படை, பாதரை பகுதியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் துபலேஷ், 24, மற்றும் முன்னா,23, ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். இது குறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய ஸ்டெஃபி வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் நாமக்கல் காவல் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கொலையான ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த துபலேஷ் மற்றும் முன்னா ஆகியோருக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், இருவரும் பணிபுரியும் இடத்திலேயே தாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இரவு பணிக்கு வர வேண்டியவர்கள், மாலை 5 மணிக்கு இருவரும் வெளியே சென்றவர்கள், மீண்டும் பணிக்கு வரவில்லை என்றும், இந்நிலையில் அவர்கள் இருவருமே சடலமாக இருந்ததுதான் தங்களுக்கு தெரியும் என உடன் பணி புரியும் சகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நூற்பாலையில் தங்கும் விடுதியில், முன்னா மற்றும் துபலேஸ் தங்கும் அறையில் மேலும் ஆறு நபர்கள் உடன் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர்களுடன் தங்கி இருந்த மற்ற வட மாநில தொழிலாளர்களிடம் தனியார் நூற்பாலையின், தங்கும் விடுதிக்கு நேரில் சென்று போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையான இருவரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்தனரா? அல்லது இவர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர், ராசிபுரம் துணை காவல் கன்காணிப்பாளர், எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர், திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu