இரண்டு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை தீவிரம்

இரண்டு பெண்கள் மாயம்   போலீசார் விசாரணை தீவிரம்
X
குமாரபாளையத்தில் இரு பெண்கள் மாயமானதால், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

இரண்டு பெண்கள் மாயம்

போலீசார் விசாரணை தீவிரம்


குமாரபாளையத்தில் இரு பெண்கள் மாயமானதால், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ராமு, 45. கூலி. இவரது மகள் கலையரசி, 19. டைலர் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 07:00 மணி முதல் வீட்டில் காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. சூர்யா, லோகநாதன் என்ற இளைஞர்களுடன் டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சென்றதாக பலர் கூறியுள்ளனர். இது குறித்து, ராமு குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

குமாரபாளையம் அருகே ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் வேல்ராஜா, 41. கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி, 31. நேற்றுமுன்தினம் காலை 06:00 மணியளவில் பால் வாங்கி வருவதாக புவனேஸ்வரி கூறி சென்றவர்,. இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் வேல்ராஜ புகார் செய்துள்ளார். இந்த இரண்டு புகார்கள் குறித்தும் குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story