குமார பாளையம் அருகே கார்- டூவீலர் மோதலில் இருவர் படுகாயம்

குமார பாளையம் அருகே கார்- டூவீலர் மோதலில் இருவர் படுகாயம்
X

சாலை விபத்து நடந்த இடம்.

குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது25.) இவரது நண்பர் சுபாஷ்,( 24. ).இருவரும் பொக்லைன் இயந்திரம் ஓட்டுனர்கள். நேற்று பகல் 12:00 மணியளவில் சங்ககிரி செல்வதற்காக சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே ரமேஷ் பேஷன் புரோ டூவீலரை ஓட்ட, சுபாஷ் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார். கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார் வேகமாக வந்ததில் இவர்கள் வந்த டூவீலர் மீது மோத, இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி கார் ஓட்டுனர், கோபியை சேர்ந்த இளங்கோவடிவேலை கைது செய்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா