முனியப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இரு டி.எஸ்.பி

முனியப்பன் கோவில் , பல்லக்காபாளையம், குமாரபாளையம்.
ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சண்முகம் முனியப்பன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து திருச்செங்கோடு சீனிவாசன் டி.எஸ்.பி. அதே கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரு டி.எஸ்.பி.க்களுக்கும் கோவில் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். புத்தாண்டு கொண்டாட்டம் பொது இடங்களில் நடக்க அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்தது. குமாரபாளையம் தம்மண்ணன் சாலை பகுதியில் உள்ள மைதானத்தில் புத்தாண்டு விழா கொண்டாட லைட்டுகள் கட்டப்பட்டு இதர பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இது பற்றி தகவலறிந்த எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் நேரில் சென்று, புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினார்கள். நேற்றுமுன்தினம் இரவு முதல் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் தீவிர ஆய்வு செய்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாதவாறு கண்காணித்தனர். நேற்று பகலில் வந்த டி.எஸ்.பி. சீனிவாசன் புறநகர் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். முனியப்பன் கோவிலில் புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu