/* */

வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் இரண்டு சேர்மன்கள் பங்கேற்பு

பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியில் இரு சேர்மன்கள் பங்கேற்றனர்

HIGHLIGHTS

வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் இரண்டு  சேர்மன்கள் பங்கேற்பு
X

பள்ளிபாளையத்தில் நடைபெற்ற வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியில் பள்ளிபாளையம், குமாரபாளையம் இரு சேர்மன்கள் பங்கேற்றனர்

பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியில் இரு சேர்மன்கள் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வட்டார சுகாதாரத்துறை ஏற்பாட்டின் பேரில் வட்டார சுகாதார பேரவை கலந்தாய்வு கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ், பள்ளிபாளையம் நகராட்சி துணை தலைவர் பாலமுருகன், படைவீடு பேரூராட்சி தலைவி ராதாமணி செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

வட்டார அளவில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு, சித்த மருத்துவத்துறை, காச நோய் தடுப்பு பிரிவு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்களின் வகைகள், தானியங்களால் ஆன உணவு பொருட்கள், மருத்துவத்துறை மூலம் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஊக்கத்தொகைகள் பற்றிய விளக்க கையேடுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. டாக்டர்கள் செந்தாமரை, திவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Updated On: 10 Sep 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...