குமாரபாளையத்தில் ஒரே இடத்தில் இரு வேட்பாளர்கள் பிரச்சாரம்: தள்ளுமுள்ளு தவிர்ப்பு

குமாரபாளையத்தில் ஒரே இடத்தில் இரு வேட்பாளர்கள் பிரச்சாரம்: தள்ளுமுள்ளு தவிர்ப்பு
X

குமாரபாளையத்தில் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்த இரண்டு வேட்பாளர்கள்.

குமாரபாளையத்தில் ஒரே இடத்தில் இரு வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ததால் தள்ளு முள்ளு ஏற்படும் நிலை உருவானது.

குமாரபாளையத்தில் 33 வார்டுகளிலும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 17வது வார்டு பகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சத்தியபிரியா, இதே வார்டில் அ.ம.மு.க. சார்பில் சந்திரபிரபா போட்டியிடுகிறார்.

இந்த வார்டுக்குட்பட்ட கத்தாளப்பேட்டை பகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அதே பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பிரச்சாரம் செய்ய வந்தனர். இங்கு தள்ளு, முள்ளு ஏற்படும் நிலை உருவானது. இரு வேட்பாளர்களின் நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தியதால் நிலைமை சீரானது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!