வெப்படையில் ஆடு திருடியதாக இருவர் கைது: போலீசார் அதிரடி

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

வெப்படையில் ஆட்டை திருடிக்கொண்டு பைக்கில் தப்ப முயன்ற இருவரை துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் அருகே வெப்படை, லட்சுமிபாளையம் பகுதியில் வசிப்பவர் ராசம்மாள், 56. ஆடுகள் வளர்த்துக்கொண்டு மேய்த்தும் வருகிறார். நேற்று மாலை 05:00 மணியளவில் துண்டுக்காடு மயானம் அருகில் ஆடுகள் மேய்த்து விட்டு ஆடுகளை ஒட்டிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆடுகள் முன்னே செல்ல, பின்னால் ராசம்மாள் வந்து கொண்டிருந்தார். அப்போது எலந்தகுட்டை பாஸ்கர், 23, பள்ளிபாளையம், காந்திபுரம் பாலசுப்ரமணி, 19 ஆகிய இருவரும் ஆடு ஒன்றை திருடிக்கொண்டு ஹீரோ பைக்கில் தப்பிச்செல்ல முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட ராசம்மாள் துரத்தி சென்று பைக்கை பிடித்து ஆட்டை மீட்டார்.

பின்னர் இருவரையும் பைக்குடன் பிடித்து வெப்படை போலீசில் ஒப்படைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுத்தார். இந்த புகாரின்பேரில் வெப்படை எஸ்.ஐ. வெற்றிவேல் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story