நான்கு டூவீலர்கள் திருடிய இருவர் கைது, 4 டூவீலர், ஒரு கார் பறிமுதல்

நான்கு டூவீலர்கள் திருடிய இருவர்  கைது,  4 டூவீலர், ஒரு கார் பறிமுதல்
X
குமாரபாளையத்தில் நான்கு டூவீலர்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டதுடன் 4 டூவீலர்கள் , ஒரு கார் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.

நான்கு டூவீலர்கள் திருடிய இருவர் கைது, 4 டூவீலர், ஒரு கார் பறிமுதல்

குமாரபாளையத்தில் நான்கு டூவீலர்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டதுடன் 4 டூவீலர்கள் , ஒரு கார் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிக்கும் நெடுஞ்சாலை அலுவலர் சண்முகசுந்தரம், 29, கல்லூரி பேராசிரியை அருள்மெர்சல் மோனிசா, 32, ஆகியோர் தங்கள் வீடுகளுக்கு முன்பு இரவில் தங்கள் ராயல் என்பீல்ட் வாகனத்தை நிறுத்தி விட்டு, காலையில் எழுந்து பார்த்த போது, இருவர் வாகனமும் திருடப்பட்டிருந்தது. அதே போல், பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி முன்பு நிறுத்தி வைத்த பி.காம், மற்றும் எம்.பி,ஏ படிக்கும் கல்லூரி மாணவர்கள் பாஸ்கர், 20, சுபாஷ், 22, ஆகியோரது ராயல் என்பீல்ட், யமஹா டூவீலர்கள் காலையில் நிறுத்திவிட்டு கல்லூரிக்குள் சென்று, தேர்வு எழுதி விட்டு, மாலை திரும்பி வந்து பார்த்த போது, இருவரது வாகனங்களும் காணவில்லை. இது குறித்து நால்வரும் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் குற்றவாளிகள் விழுப்புரம் அர்ஜுன், 21, சேலம் மோகன்ராஜ், 24, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவன் தலைமறைவானான். இவனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட நான்கு டூவீலர்கள், திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரெனால்ட் டிரைப் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் நான்கு டூவீலர்கள் திருடிய வழக்கில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார், குற்றவாளிகள் இருவரை கைது செய்ததுடன், 4 டூவீலர்கள் , ஒரு கார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!