வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது - குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் பழனிசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜம் தியேட்டர், உழவர் சந்தை முன்பு ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த, சிக்கந்தர்பாஷா, 58, தமிழ்மணி, 27, ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து வெளிமாநில பரிசு சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!