போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது: பணம் பறிமுதல்

போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது:  பணம் பறிமுதல்
X

குமாரபாளையம் காவல்நிலையம்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, மாதையன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நாராயண நகர் பகுதியில் சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே இருவர் போலி லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பதும், அவர்களின் பெயர்கள் பாலாஜி, 41, இளங்கோவன், 54, என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 நெம்பர் எழுதப்பட்ட 4 சீட்டுகளும், 2 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!