குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது: போலீசார் அதிரடி

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது: போலீசார் அதிரடி
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில், போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பாய்ஸ் ஓட்டல் கடை அருகே போலி லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு இருவர் போலி லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தனர். விசாரணை செய்ததில் கம்பன் நகரை சேர்ந்த இளவரசன், 45, சுந்தரம் நகரை சேர்ந்த நடராஜ், 51 என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களிடம் வெள்ளை பேப்பரில் மூன்று நம்பர்கள் எழுதப்பட்ட நான்கு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
future of ai art