குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் கல் வெட்டியெடுத்ததாக இருவர் கைது

குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் கல்  வெட்டியெடுத்ததாக இருவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் கல் வெட்டியெடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டதுடன் ஜே.சி.பி பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் மினரல் என்டர்பிரைசஸ் குவாரியில் அனுமதி இல்லாமல் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கல் வெட்டி எடுப்பதாக வருவாய் ஆய்வாளருக்கு விஜய்க்கு தகவல் கிடைத்தது. நேற்றுமுன்தினம் மாலை 05:15 மணியளவில் நேரில் சென்று பார்த்த போது, கல் வெட்டி எடுத்துக்கொண்டிருந்த இரு நபர்கள், ஜே.சி.பி. இயந்திரம் ஒன்று, டிப்பர் லாரி ஒன்று ஆகியவற்றை குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்து, குவாரி உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்தார்.

இவரது புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லாரி ஓட்டுனர்களான திருச்செங்கோடு, கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 43,) எடப்பாடி முனியன் வளவு பகுதியை சேர்ந்த சுரேஷ்(, 34, )ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்டதுடன், ஜே.சி.பி. இயந்திரம் ஒன்று, டிப்பர் லாரி ஒன்று, டிப்பர் லாரியில் இருந்த ஒரு யூனிட் கல் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!