த.வெ.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

த.வெ.க. சார்பில் பட்டாசு வெடித்து  இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் த.வெ.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் த.வெ.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

த.வெ.க. சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கட்சியின் கொடி மற்றும் கொடி பாடல் நேற்று கட்சியின் நிறுவனர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதனையொட்டி குமாரபாளையம் த.வெ.க. கட்சி சார்பிலும், நாமக்கல் மேற்கு மாவட்டம், குமாரபாளையம் தொகுதி சார்பிலும் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, நகர தலைவர்கள் சக்திவேல், ஆறுமுகம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்.

இது குறித்து நிர்வாகி மோகன்ராஜ் கூறியதாவது:

கட்சியின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலர் வழிகாட்டுதல்படி, செயல்பட உள்ளோம். தலைவர் அறிவிக்கும் நாளில் நடைபெறவுள்ள மாநாட்டில் நங்கள் எங்கள் மாவட்டம் சார்பில் பெருமளவில் பங்கேற்க உள்ளோம். 2026 தேர்தலில் தலைவர் கை காட்டும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் ஒன்றிய தலைவர் நடராஜன், மகாபிரபு, சாந்தி,. பேபி, மாதேஸ்வரன், வாசுதேவன், துரைராஜ், கவின், அன்புராஜ், தீனு உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story