குமாரபாளையத்தில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா - கட்சியினர் உற்சாகம்

குமாரபாளையத்தில் டிடிவி தினகரன்  பிறந்தநாள் விழா - கட்சியினர் உற்சாகம்
X

குமாரபாளையத்தில், டிடிவி தினகரனின் பிறந்தநாளை ஒட்டி, சின்னப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய அமமுகவினர். 

குமாரபாளையத்தில், டிடிவி தினகரன் பிறந்தநாளை, அமமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, அவரது கட்சி தொண்டர்கள் குமாரபாளையத்தில் நகர செயலர் அங்கப்பன் தலைமையில் கொண்டாடினர். இதையொட்டி பள்ளிபாளையம் பிரிவு சாலை, பஸ் ஸ்டாண்ட், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில், பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் கேக், இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், காளியம்மன் கோவில், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், நகர அவைத்தலைவர் சீனிவாசன், நகர துணை செயலர் சீனிவாசன், நகர எம் .ஜி.ஆர். மன்ற நிர்வாகி வெங்கடேசன், அம்மா பேரவை நிர்வாகி ரமேஷ், நகர பொருளாளர் தேவராஜன், நகர மகளிர் அணி செயலர் சகுந்தலா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி அஜித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!