தாலுகா அலுவலகத்தில் டி.எஸ்.ஒ. பொறுப்பேற்பு
பைல் படம்
குமாரபாளையம் டி.எஸ்.ஒ.வாக சித்ரா சில மாதங்கள் முன்பு போருபெற்றுகொண்டார். அவர் 4 மாத நீதிமன்ற மாஜிஸ்திரேட் பயிற்சி பெற சென்று விட்டார். இதனால் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடம் காலியாக இருந்து வந்தது.
ரேசன் கடையில் பொருட்கள் வாங்க கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் போட்ட சான்றிதழ் தந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என சில ரேசன் கடை பணியாளர்கள் சொல்ல, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதைய டி.எஸ்.ஒ. சித்ரா நேரில் சென்று, சான்றிதழ் தேவையில்லை, தடுப்பூசி போட்ட விபரம் மட்டும் படிவத்தில் பூர்த்தி செய்தால் மட்டும் போதும் என சமரசம் செய்து வைத்தார்.
இந்நிலையில் அவர் நீதிமன்ற பயற்சிக்கு போனதால் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளுக்குட்பட்ட 105 ரேசன் கடைகளின் நிர்வாகம் கேள்விக்குறியானது. டி.எஸ்.ஒ. பணியிடம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினரும், பல பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் ஏற்கனவே டி.எஸ்.ஒ. வாக பணியாற்றிய வசந்தி குமாரபாளையம் தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு தாசில்தார் தமிழரசி, ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார், துணை தாசில்தார் ரவி, உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
டி.எஸ்.ஒ. அலுவலக நிர்வாகி ராஜன் கூறியதாவது:
குமாரபாளையம் தாலுக்கா அளவிலான 105 ரேசன் கடைகளில் 87 ஆயிரத்து 954 அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் 21 இலவச பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. ஓரிரு நாட்களில் இந்த பணி நிறைவு பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu