டயர் வெடித்து நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..!

டயர் வெடித்து நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..!
X

விபத்து (கோப்பு படம்)

குமாரபாளையத்தில் டயர் வெடித்து நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையத்தில் டயர் வெடித்து நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கொளுந்தம்பட்டு பகுதியில் வசிப்பவர் முரளி,(28). டிரைவர். இவர் லாரியில் தன்னுடன் பிரபாகரன் என்பவருடன் கோவையில் அலுமினிய பாத்திரங்கள் ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு 11:45 மணியளவில் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி அருகே வருகையில், லாரியின் முன்புற டயர் வெடித்து, வலது புறம் இழுத்து சென்று விட்டது.

சிக்னல் போட்டுவிட்டு, இருவரும் கீழே இறங்கி, லாரியை சுற்றி கற்கள், செடி கொடிகள் வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஈச்சர் லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், ஈச்சர் லாரி முன்புறம் நசுங்கியதில், ஓட்டுனர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டார். இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், இரண்டு கால்களும் நசுங்கி சிக்கி கொண்டது.

ஈச்சர் லாரியில் வந்த மற்றொரு நபரும் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களும், குமாரபாளையம் தீயணைப்பு படையினரும் இருவரையும் மீட்டனர். குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஈச்சர் லாரி ஓட்டுனர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துராஜ், 50,என்பதும், உடன் வந்தவர் சென்னை, சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அருள்முருகன், 32, என்பதும் தெரியவந்தது. இருவரும் சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 02:10 மணியளவில் முத்துராஜ் உயிரிழந்தார். அருள்முருகன் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!