குமாரபாளையம் அருகே லாரி-இரு சக்கர வாகனம் நேருக்குநேர் மோதல்; இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே லாரி-இரு சக்கர வாகனம் நேருக்குநேர் மோதல்; இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி. 

குமாரபாளையம் அருகே லாரியில் சிக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகுமார்,வயது 17, மற்றும் வெப்படை, பாதரையை சேர்ந்தவர் பாஸ்கர், 20. கூலி தொழிலாளிகள். இவர்கள் நேற்று மாலை 5:30 மணியளவில் பாதரையிலிருந்து குமாரபாளையம் நோக்கி, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சசிகுமார் ஓட்ட, பாஸ்கர் பின்னால் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர்.

காவடியாங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, குமாரபாளையத்திலிருந்து வெப்படை நோக்கி வந்த லாரி இவர்கள் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் டி.வி.எஸ்.ல் வந்த இருவரது கால்களும் நசுங்கி சேதமாகின. உடனடியாக இவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், நாமக்கல், கணேசபுரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமசாமியை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!