குமாரபாளையம் அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

குமாரபாளையம் அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி
X

விபத்தில் நொறுங்கிய ஆட்டோ.

குமாரபாளையம் அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் நெஞ்சில் கம்பி குத்தி ஆட்டோ ஓட்டுனர் பலியானார்.

குமாரபாளையம் கே.ஒ.என் தியேட்டர் அருகே வசிப்பவர் குமரவேல், 62. ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவர் பயணி சரவணன் என்பவரை ஏற்றிக்கொண்டு கல்லங்காட்டுவலசு ஆரம்ப சுகாதார மையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது மருத்துவமனை எதிரே சத்யா நகர் செல்லும் வழியிலிருந்து போர்வெல் லாரி ஒன்று எவ்வித சிக்னலும் செய்யாமல், கிளீனரும் இல்லாமல் அஜாக்கிரதையாக பின்னோக்கி வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோ ஓட்டுனர் குமரவேல் நெஞ்சின் பக்கவாட்டில் போர்வெல் லாரியின் ராடு ஏறியது.

இதனால் பலத்த காயமடைந்த அவரை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு போக்கு வண்டி மூலம் அழைத்து சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வழியில் இறந்ததாக கூறினார்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுனரின் மகன் வெற்றிவேல், குமாரபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story