மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் : மாவட்ட கலெக்டர் வழங்கினார்..!

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் : மாவட்ட கலெக்டர் வழங்கினார்..!
X

பள்ளிபாளையம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

பள்ளிபாளையம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கிய மாவட்ட கலெக்டர்

மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று பள்ளிபாளையம் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி, 65. மாற்றுத்திறனாளி. இவர் மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, சித்ரா ஆகியோரிடம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு கோரிக்கை வைத்தார்.

மகளிர் அணி சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிடம் இது குறித்து கோரிக்கை விடுத்தனர். உடனே இந்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார். இதில் சித்ரா, மல்லிகா, வசந்தி, மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இதைப்போன்று பல உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறார். அதனால் நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் அவர் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதுடன் அவரை பெருமையாகவும் பேசி வருகின்றனர்.

பணிகளை தேங்கவிடாமல் செய்வது, உடனுக்குடன் ஆய்வு மேற்கொள்வது என்று அவரது பணிகளை திறம்பட செய்வதுடன் திட்டப்பணிகளையும் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tags

Next Story