குமாரபாளையத்தில் சி.பி.எம் சார்பில் நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம்

குமாரபாளையத்தில் சி.பி.எம் சார்பில் நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம்
X

குமாரபாளையம் சி.பி.எம் சார்பில், ஆனங்கூர் பிரிவில்,  முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 

குமாரபாளையம் சி.பி.எம் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறனுக்கு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் மறைவிற்கு, குமாரபாளையம் சி.பி.எம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் ஆனங்கூர் பிரில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர குழு உறுப்பினர் காளியப்பன் தலைமை வகித்தார்.

இதில் மூத்த நிர்வாகி ஆறுமுகம் பேசியதாவது: எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் தேவையில்லை என சட்டமன்றத்தில் பேசியவர். அனைவரும் அதே சம்பளம் பெறும் போது, தானும் பெற்று அதனை கட்சி அலுவலகத்தில் கொடுத்து விட்டு, தனக்கு மாத சம்பளமாக 10 ஆயிரம் மட்டும் பெற்றுக்கொண்டவர் நன்மாறன்.
என் .எஸ்.கே. போல் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். இதனால், அவரை அனைவரும் மேடை கலைவாணர் என்றும் அழைப்பார்கள். சிறந்த எழுத்தாளரும் கூட. மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு இருமுறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டும், இதுவரை சொந்த வீடு இல்லாதவர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம், நகரக்குழு உறுப்பினர்கள் சண்முகம், சரவணன், மாதேஸ், பெருமாயி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. சுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!