குமாரபாளையத்தில் இந்திரா காந்தி நினைவு நாளில் உருவ படத்திற்கு மரியாதை

குமாரபாளையத்தில் இந்திரா காந்தி நினைவு நாளில் உருவ படத்திற்கு மரியாதை
X

குமாரபாளையத்தில் காங்கிரசார் இந்திரா காந்தி நினைவு நாளை அனுசரித்தனர்.

குமாரபாளையத்தில் காங்கிரசார் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

குமாரபாளையத்தில் காங்கிரசார் இந்திரா காந்தி நினைவு நாளை அனுசரித்தனர்.

குமாரபாளையம் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 39ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். மேலும் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி இருவரது திருவுருவப்படத்திற்கும் மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் தங்கராஜ், காளியப்பன், சுப்பிரமணியம், சுந்தர்ராஜன், குப்புசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் இது குறித்து கூறியதாவது:-

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி ,இந்திரா காந்தியாக மாறினார்.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 ,1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story