NativeNews செய்தி எதிரொலி : காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்த மரங்கள் அகற்றம்..!

NativeNews செய்தி எதிரொலி :  காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்த  மரங்கள் அகற்றம்..!
X

குமாரபாளையம் காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளரும் மரங்கள் அகற்ற வேண்டும் என நேட்டிவ் நியூஸ்..ல் செய்தி வெளியிடப்பட்டதையடுத்து, அந்த மரங்கள் அகற்றப்பட்டன.

குமாரபாளையம் காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்த மரங்கள் அகற்றப்பட்டன.

நேட்டிவ்நியூஸ் செய்தி எதிரொலி காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்து இருந்த மரங்கள் அகற்றம்.

குமாரபாளையம் காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளர்ந்த மரங்கள் அகற்றப்பட்டன. குமாரபாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே நகராட்சி அலுவலகம் அருகே பழைய காவேரி பாலம், காவேரி நகர் புதிய காவேரி பாலம், சேலம் கோவை புறவழிச்சாலையில் இரண்டு பாலங்கள் என நான்கு பாலங்கள் உள்ளன.

இதில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய காவேரி பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்ததால், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, கன ரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

இதில் பக்கவாட்டு சுவர்கள் பாதிக்கப்பட்டு, சில மாதங்கள் முன்பு பராமரிப்பு செய்யப்பட்டது. தற்போது இந்த பாலத்தின் பக்கவாட்டில் அதிக அளவிலான அரச மரங்கள் வளர்ந்துள்ளன. நாளாக, நாளாக இந்த மரங்கள் பெரிதாகி வருகிறது. ஏற்கனவே பலவீனமான இருக்கும் இந்த பாலத்தில் இந்த அரச மரத்தின் வேர்கள் ஊடுருவி மேலும் பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்க வைக்கும். ஆகவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த அரசமர செடிகளை அகற்றி, பாலத்தின் உறுதி தன்மையை காக்க வேண்டும், என்ற செய்தி நேட்டிவ் நியூஸ்.-ல் செய்தி வெளியானது.

இதன் பலனாக இந்த மரங்கள் அகற்றப்பட்டன. மேலும் குமாரபாளையம் பகுதியில் இருந்து பவானி செல்லும் போது, பாலத்தின் நுழைவுப்பகுதியில், மின்சார வாரியம் சார்பில் புதைவட கேபிள்கள் அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட மர உருளைகள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாலத்தின் மீது செல்ல பெரும் இடையூறாக உள்ளது. இதனை அகற்றி, பொதுமக்கள் எளிதாக பாலத்தின் மீது செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்