குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை
X

பைல் படம்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தலைமை டாக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜி.ஹெச். தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், தமிழக முதல்வரால் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 என்ற பெயரில் புதிய காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை, விபத்து காயம் உள்ளிட்ட சிகிச்சை மேற்கொள்ள அரசால் அறிவிக்கப்பட்ட தொகையை செலுத்தி காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் கூட யார் இல்லாவிட்டாலும் 48 மணி நேரத்திற்கு தடையில்லா சிகிச்சை வழங்க இந்த காப்பீடு உதவியாக இருக்கும். பாதிக்கப்பட்டவர் விரும்பினால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறினாலும் அனுப்பி வைக்கப்படும். அங்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சையை பெறலாம்.

இந்த காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் அரசுக்கு வருமானம் கிடைப்பதுடன், மருத்துவமனையின் தரம் மேம்படுத்தப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகம் நியமிக்கப்படுவார்கள்; உயரிய மெசினரிகள் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை மேற்கொள்ளப்படும். காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் போல் அரசு மருத்துவமனைகளும் பலன் பெறும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!