குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் திருவீதியுலா
குமாரபாளையத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் சார்பில் திருவீதி உலா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் குளத்துக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின் சார்பில் ஆண்டுதோறும் ஆண்டுவிழா, திருவீதி உலா, திருவிளக்கு பூஜை, அன்னதான விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 20ம் ஆண்டு விழாவையொட்டியும், மூத்த குருசாமி வேணு குருசாமியின் 50ம் ஆண்டு யாத்திரையையொட்டியும் நேற்று காவேரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார்.
சேலம் சாலை, குளத்துக்காடு, பவர் ஹவுஸ் எதிரில் உள்ள கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் இன்று மாலை 12:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. மாலை 05:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனையும், திருவிளக்கு பூஜையும், மகா பஜனையும் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வேணு குருசாமி, முருகசாமி, ஜோதிலிங்கம், வசந்த்குமார், ஜெயபால், லோகநாதன், கண்ணன்பாபு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu