குமாரபாளையம் நகராட்சி 32வது வார்டில் போட்டியிட சீட் கேட்ட திருநங்கைகள்

குமாரபாளையம் நகராட்சி 32வது வார்டில் போட்டியிட  சீட் கேட்ட திருநங்கைகள்
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குமாரபாளையம் நகராட்சி 32வது வார்டு பகுதிக்கு சீட் கேட்டு திருநங்கைகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகராட்சியில் 32வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவில் சீட் கேட்டு திருநங்கைகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை முதல் துவங்கவுள்ளது. குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 32வது வார்டுக்கு சபீனா என்ற திருநங்கை விருப்பமனு கொடுத்திருந்தார். அந்த வார்டுக்கு சீட் கேட்டு சபீதாவுக்கு ஆதரவாக திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து திருநங்கைகள் மாவட்ட தலைவி அருணா நாயக் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சியில் திருநங்கைக்கு ஒரு சீட் வழங்க மாவட்ட செயலர் மூர்த்தி, நகர பொறுப்பாளர் செல்வம் ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். அதற்கு எங்கள் நன்றி. ஏற்கனவே விருப்ப மனு கொடுக்கப்பட்ட 32வது வார்டுக்கு சீட் தர கேட்டுள்ளோம். முடிந்தவரை பார்க்கிறோம், இல்லாவிடில் எதாவது ஒரு வார்டு தர ஏற்பாடு செய்கிறோம், என நகர நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எங்களுக்கு வேறு வார்டு வேண்டாம். நாங்கள் கேட்ட வார்டு மட்டுமே வேண்டும். சீட் வழங்காவிடில். எங்கள் சங்க உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future