திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம்

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான   விளையாட்டு அரங்கம் துவக்கம்
X

குமாரபாளையம் பகுதி திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அரங்கத்தை  காவல்துறை அதிகாரி பிரித்திகா யாஷினி, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துணை தலைவர் சச்சின் சிவா இருவரும் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

குமாரபாளையத்தில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கப்பட்டது.

அயர்லாந்தில் பணியாற்றும் நிர்மல் முயற்சியால் குமாரபாளையம் பகுதி திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டு அரங்கம் வட்டமலை அம்மையப்பர் அரங்கத்தில் துவக்கப்பட்டது. இதன் துவக்க விழாவுக்கு நிர்மலின் பெற்றோர்கள் பழனிசாமி, மரகதம் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வரும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின காவல்துறை அதிகாரி பிரித்திகா யாஷினி, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துணை தலைவர் சச்சின் சிவா இருவரும் இந்த அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன் குத்துவிளக்கேற்றி வைத்தனர். இதில் கராத்தே, கேரம், பாட்மிட்டன், ரோபோடிக்ஸ், டேபிள் டென்னிஸ், யோகா, நடனம், இசை உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதில் கத்தேரி ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, விடியல் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business