கொட்டும் மழையில் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்

கொட்டும் மழையில் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்
X

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி, மழையில் நனைந்தபடி சீர்வரிசை தட்டுக்களுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள்.

குமாரபாளையத்தில் கூத்தாண்டவர் திருவிழாவை திருநங்கைகள் கொட்டும் மழையில் கொண்டாடினர்.

குமாரபாளையம் ராஜாஜி நகரில் கூத்தாண்டவர் திருவிழாவை திருநங்கைகள்ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கூத்தாண்டவர் திருவிழாவை மேள, தாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக வந்த திருநங்கைகள் சுவாமி முன் படையலிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர்.

அதன்பின் மழையில் கும்மியடித்தபடி ஆடிப்-பாடினார்கள். சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!