மின்மாற்றி இடமாற்றம் செய்ய கோரிக்கை..!

மின்மாற்றி இடமாற்றம் செய்ய கோரிக்கை..!
X

குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில் எதிரில், இடமாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ள மின்மாற்றி.

குமாரபாளையத்தில் மின்மாற்றி இடமாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையத்தில் மின்மாற்றி இடமாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில் உள்ளது. இதன் எதிரில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளி, கிருத்திகை, சஷ்டி, பங்குனி மாதம், தைப்பூசம், கார்த்திகை, மார்கழியில் விரதமிருந்து அறுபடை கோவில் யாத்திரை செல்லும் காலம் உள்ளிட்ட பல விஷேச வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பெருமளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவில் எதிரில் மின்மாற்றி உள்ளதால், யாகசாலை பூஜைகள், திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த சிரமம் ஏற்படுவதுடன், பொதுமக்கள் அச்சத்துடன் நின்று சுவாமி தரிசனம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

இந்த மின்மாற்றியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு, மின்தடை ஏற்பட்டு வருகிறது. நேற்று காலையில் கூட தீப்பொறி உருவாகி, மின்தடை ஏற்பட்டு, பலமணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்மாற்றியை இடமாற்றம் செய்து, இந்த இடம் அருகில் உள்ள பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகில் அமைக்க வேண்டி, பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மின்மாற்றி இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றனர்.

Tags

Next Story
ai solutions for small business