குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குமாரபாளையம் நகராட்சியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 264 வாக்குச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என சரிபார்த்தல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல், விரலில் மை வைத்தல், ஓட்டுப்பதிவு அறையில் கூட்டம் சேர்க்காமல் இருத்தல், ஆய்வுக்கு பின் ஒட்டு பதிவு செய்ய அனுமதித்தல், ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும் அனைத்து ஆவணங்களும் பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu