குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
X

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று தை அமாவாசை நாள் என்பதால் காலை முதலாக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இது பற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் 6 வகுப்பறைகளில் வாக்குச்ச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் வாக்காளர்கள் பெயர் வார்டு லிஸ்ட்டில் உள்ளதா? பூத் முகவர்களுக்கு தெரிந்தவர்தானா? முதல் முறைதான் ஓட்டு போட வந்துள்ளாரா? பெயர் சரி பார்த்தல் பணி முடிந்து வாக்காளர்களின் விரலில் மை வைத்தல், தேர்தல் ஓட்டுப்பதிவு நேரம் முடிந்ததும் ஓட்டுப்பதிவு மெசின் சீல் வைத்தல், ஒட்டு போட்டவர்கள் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட கலெக்டர் உத்திரவின் படி தேர்தல் மண்டல அலுவலர்கள் பலர் வந்து இந்த பயிற்சி முகாமினை நடத்தினார்கள். இதில் 247 வாக்குச்சாவடி அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story
photoshop ai tool