வாக்குச்சாவடி உதவியாளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவது குறித்து பயிற்சி முகாம்
குமாரபாளையம் ஓட்டுச்சாவடிகளில் கிருமிநாசினி மருந்து வழங்க ஓட்டுச்சாவடி உதவியாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சக்திவேல் பேசினார்.
குமாரபாளையம் வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி மருந்து வழங்க வாக்குச்சாவடி உதவியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளில் 73 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தேவையான சாமியானா, மின் விளக்குகள், சேர்கள், டேபிள்கள், மின் விசிறிகள், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தல் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
கொரோனா பரவல் இருப்பதால் சுகாதாரத்துறை சார்பில், ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மருந்து கொடுத்து கைகளை சுத்தமாக்கி கொள்ள செய்தல், கையுறைகள் வழங்குதல், வெப்பமானி வைத்து உடலின் வெப்பநிலை அறிந்து கொள்ளுதல், ஆகியவைகளை கவனிக்க ஓட்டுச்சாவடி ஒன்றுக்கு இருவர் வீதம் எக்ஸல் கல்லூரி மாணவர்கள் 146 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சி முகாம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சக்திவேல் பங்கேற்று பயிற்சியினை வழங்கி ஆலோசனைகள் கூறினார். எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன், மலேரியா, டெங்கு பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu