பள்ளிபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்: 70 பேர் கைது

பள்ளிபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்  மறியல் போராட்டம்: 70 பேர் கைது
X

பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொது துறைகளை தனியாருக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்.

பெகசாஸ் உளவு செயலி பயன்படுத்தப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்கியத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன் வைத்து நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி பள்ளிபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகி அசோகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story