திடீர் சாலை பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

திடீர் சாலை பள்ளத்தால்  போக்குவரத்து பாதிப்பு

பள்ளிபாளையம் அருகே சாலையில் ஏற்பட்ட பெரும் பள்ளம் 

பள்ளிபாளையம் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளுக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ,பழைய கிராம நிர்வாக அலுவலகம் இடிக்கப்பட்டு, அதன் அருகே இருந்த மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணறு ஒன்று மூடப்பட்டு, அதன் மேல் தார் சாலை அமைக்கப்பட்டு, கனரக வாகனங்கள் உள்ளிட்டவை அவ்வழியே சென்று வந்தது.

இந்நிலையில் அவ்வழியே சென்ற ஆட்டோவின் பின்பக்க சக்கரம் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்த மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஆட்டோ பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்ட கிணறு சமீப காலமாக தொடர்ந்த மழையின் காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும் சுமார் 10 அடிக்கு மேலாக மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு விரைந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கற்களை கொண்டு கிணற்றை முழுவதுமாக மூடி, தற்காலிக தார் சாலை அமைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story