கட்டுமான கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு

கட்டுமான கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு
X

குமாரபாளையத்தில் மேற்குகாலனி பி.ஆர்.பி. பேக்டரி சாலையில் கட்டுமான கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் கட்டுமான கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் மேற்குகாலனி பி.ஆர்.பி. பேக்டரி சாலையில் அப்பகுதியினர் கட்டுமான கழிவுகள் கொட்டி வைத்துள்ளனர். இதனால் அவ்வழியே டெம்போ, கார் உள்ளிட்ட வாகனங்கள் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ள நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் கொண்டு செல்லவும், ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல் பண்டல்கள் கொண்டு வரவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான கழிவுகள் அகற்றி, வாகன போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!