குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு குறைக்க சேதமான கழிப்பிடம் இடிப்பு

குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு குறைக்க  சேதமான கழிப்பிடம் இடிப்பு
X

குமாரபாளையம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறு குறைப்பதற்காக சேதமான கழிப்பிடம் இடிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு குறைப்பதற்காக சேதமான கழிப்பிடம் இடிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு குறைப்பதற்காக சேதமான கழிப்பிடம் இடிக்கப்பட்டது.

இது குறித்து குமார பாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:

குமாரபாளையம் தினசரி மார்க்கெட் புதியதாக கட்டப்பட உள்ளதால், தற்காலிகமாக பஸ் நிலையம் பகுதியில் தினசரி காய்கறி கடைகள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டுவரும் சரக்கு வாகனங்கள் வரும் வழி நெடுக ஷேர் ஆட்டோக்கள் நிற்பதால், காய்கறி வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இந்த ஆட்டோக்கள் நிற்கும் இடத்திற்கு அருகே சேதமான கழிப்பிடம் பயனற்று கிடப்பதால், அதனை பொக்லைன் மூலம் இடித்துவிட்டு, ஆட்டோக்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!