/* */

சாலை விரிவாக்கப்பணி: 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

பள்ளிபாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்

HIGHLIGHTS

சாலை விரிவாக்கப்பணி: 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
X

போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பள்ளிபாளையத்தில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 90% சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், மாலை 6:30 மணி அளவில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு காரணமாக பள்ளிபாளையம் பேருந்து நிலையம் முதல் சங்ககிரி செல்லும் சாலை வெடியரசம்பாளையம் வரை வாகனங்கள் தேங்கி நின்றது.

பள்ளிபாளையம் பாலத்தில் இருந்து ஈரோடு கருங்கல்பாளையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பள்ளிபாளையம் பழைய பாலம் முழுவதும், வாகனங்கள் தேங்கி நின்றதால் ஈரோட்டில் இருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் புது பாலத்தின் வழியாக வருவதற்கு முயற்சி செய்ததால் எதிர்வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் முழுவதுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை எடுத்து போக்குவரத்து காவலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும்

நிலைமை சரியாகாததால் மாலை நேர பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் பள்ளி,கல்லூரி முடித்து செல்லும் மாணவ மாணவியர் பேருந்துகளில் இருந்து இறங்கி தங்கள் வீடுகளுக்கு சென்றனர்..

இதனை அடுத்து இரவு 9 மணி அளவில் ஓரளவுக்கு போக்குவரத்து சீரானது .மேம்பால பணிகள் முடியும் வரை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தினம்தோறும் காலை மாலை நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி தரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 30 Jan 2024 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்