குமாரபாளையத்தில் அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்.

அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு சங்க ஆலோசனை கூட்டம், குமாரபாளையத்தில் நடைபெற்றது.

தேசிய தலைவர் வீரமலை வழிகாட்டுதல்படி, குமாரபாளையத்தில் அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வினாயகமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

இக்கூட்டம் பற்றி, மாநில கொள்கை பரப்பு செயலர் ஜெகதீஸ் கூறியதாவது: அனைத்து வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய மாநில, மத்திய அரசு உதவிகள் கிடைக்கவில்லை. இதனை பெற்று, அனைத்து வியாபாரிகளுக்கும் கிடைக்கச் செய்திடவும், வியாபாரிகளுக்கு ஏற்பட்டு வரும் பல இடையூறுகளை தவிர்த்திடவும், பொதுநல சேவைப்பணிகள் செய்து வாடிக்கையாளரான பொதுமக்களின் நலன் காத்திடவும் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

அதிக உறுப்பினர்களை சேர்த்து, பலருக்கும் பயன்படும் வகையில் சங்கம் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அதிக உறுப்பின்ர்கள் சேர்க்க வேண்டி, மாநில தலைவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அதிக உறுப்பினர்கள் சேர்த்தல், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குதல், 2022 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் நடைபெறவுள்ள இந்த சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அளவில் ஐந்தாயிரம் பேர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர் கோகுல்நாத், நகர தலைவர் சண்முகசுந்தரம், நகர செயலர் விடியல் பிரகாஸ், நகர பொருளர் மதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story