பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!

பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!
X
குமாரபாளையத்தில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்

பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

குமாரபாளையத்தில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையத்தில் சாலையோர கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. வெயிலும் அடித்துக்கொண்டு இருந்தது. திடீரென வானில் கார்மேகங்கள் சூழ்ந்து, நேற்று மாலை 02:30 மணியளவில் கன மழை பெய்தது. இந்த மழை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழை நீர் சென்றது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!