பகலில் பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!

பகலில் பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி!
X

குமாரபாளையத்தில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையத்தில் பகலில் பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

பகலில் பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

குமாரபாளையத்தில் பகலில் மழையால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

குமாரபாளையத்தில் நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் சாலையோர கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை 04:30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழை நீர் சென்றது.

இப்படி பகல் நேரத்தில் மணிக்கணக்கில் நீடிக்கும் மழையால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக சாலையோர வியாபாரிகள் புலம்பினர். மேலும் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும் மழையில் நனைந்தபடி செல்ல அவதிப்பட்டனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!