பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
X

இந்த ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

தடுப்பூசிகளை அதிகப்படுத்திட வேண்டும் விசைத்தறி தொழிலை இயக்கியட அனுமதி தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக

ரூ நான்காயிரம் வழங்கு, கொரானாவில் உயிரிழந்தவர்களை முறையாக பதிவு செய்ய வேண்டும், மகளிர் சுய உதவி குழு மைக்ரோ பைனான்ஸ், கந்து வட்டி யாளர்களிடம் தொழிலாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கி வட்டியையும் தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பித்திடு, பள்ளிபாளையம் பகுதியில் அம்மா உணவகத்தை அதிகப்படுத்திடுக,இயற்கை மரணத்திற்கு இறப்புச் சான்று பெற அரசு மருத்துவர்சான்று இலவசமாக வழங்க வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்து , விசைத்தறி உள்ளீட்டு முறை சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ7,500 நிவாரணம் மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் வாபஸ் வாங்கு! அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்து, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கு,உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story