5 கிலோ தக்காளி 100 ரூபாய்..! கூவிக்கூவி விற்பனை..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்..! கூவிக்கூவி விற்பனை..!
X

ஐந்து கிலோ ரூ.நூறுக்கு கூவிக்கூவி விற்பனை செய்யப்பட்ட  தக்காளி.

கடந்த மாதத்தில் தக்காளி விலை உச்சம் தொட்ட நிலையில் குமாரபாளையத்தில் 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த 2மாதங்களாக தக்காளி விலை ரூ.200ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. வீட்டு நிர்வாகம் கவனித்த பெண்கள் தக்காளி விலை உயர்வால் தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பாடம் கற்றுக்கொண்டனர். அந்த அளவுக்கு தக்காளி பெண்கள் மத்தியில் விளையாட்டைக்காட்டிவிட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. குமாரபாளையத்தில் 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் 5 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தக்காளியின் விலை மிகவும் உச்சத்தில் இருந்தது. கிலோ 200 எனும் வரை கூட இருந்த நிலையில், பொதுமக்கள் தக்காளியை மறக்க வேண்டிய நிலையில் இருந்தனர். படிப்படியாக தக்காளி விலை குறைந்து தற்போது ஐந்து கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு குமாரபாளையத்தில் சரக்கு வாகனங்களில் விற்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தினசரி காய்கறி மார்க்கட்டில் கிலோ முப்பது ரூபாய்க்கும், அந்தந்த பகுதி மளிகை கடைகளில் கிலோ 35, 40 எனவும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை அதிகரித்து வந்தது.சில்லறை விலையில் ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதுதான் விலை ஏற்றத்திற்கான காரணங்கள்.

இதனால் வரத்தும் குறைந்து விட்டது. தக்காளியை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய போலீஸை பணிக்கு அமர்த்திய சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அது போல் தக்காளி விவசாயிகளில் பலர் லட்சாதிபதிகளாகிவிட்டனர்.

கிலோ தக்காளி வெறும் ரூ 20, 30 க்கு இருந்த நிலையில் ரூ 170 வரை விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நூற்றுக்கணக்கில் தக்காளி லாரிகள் வந்த நிலையில் வரத்து குறைவால் 30 , 40 என்ற இரட்டை இலக்க எண்ணிக்கையிலேயே தக்காளி லாரிகள் வந்தன.

இந்த தக்காளியை வைத்து மீம்ஸ்கள் களைகட்டின. சிகப்பு தங்கம் என வர்ணிக்கப்பட்டன. சேலத்தில் ஒரு தக்காளி மார்க்கெட்டில் சிசிடிவி கேமரா போட்டு தக்காளி திருடு போவதை தடுப்பதாக செய்திகள் வெளியாகின. வடமாநிலத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வரும் தம்பதியில் கணவர் சமையலுக்கு கூடுதலாக தக்காளி பயன்படுத்தியதால் மனைவி சண்டையிட்டுக் கொண்டு வெளியேறிவிட்டார்.

அடுத்த 3 மணி நேரம்: கோவை உள்பட 23 மாவட்டங்கள்.. செம மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட் இது போல் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏழை எளிய மக்களை மட்டும் அல்லாமல் பணக்காரர்களையும் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தக்காளியின் விலை தினந்தோறும் கிலோ 10, 20 என விலை குறைந்து வந்தது.

நேற்றைய தினம் கிலோ தக்காளி ரூ 90 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றைய தினம் கிலோ தக்காளியின் விலை ரூ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் பொடி தக்காளி, அதாவது பார்ப்பதற்கு இலந்தை பழம் சைஸில் உள்ளது. அந்த தக்காளி கிலோ ரூ 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை சற்று குறைந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். மேலும் மார்க்கெட்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது. நாளைக்கு எங்கே தக்காளி விலை கூடிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் கடைகளில் தக்காளியை வாங்கி வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!