சுங்கச்சாவடி ரோந்து வாகனத்தின் மீது லாரி மோதியதில் மூவர் படுகாயம்.!

சுங்கச்சாவடி ரோந்து வாகனத்தின் மீது லாரி மோதியதில் மூவர் படுகாயம்.!
X

 (மாதிரி படம்)

குமாரபாளையம் அருகே சுங்கச் சாவடி ரோந்து வாகனத்தின் மீது லாரி மோதியதில் மூவர் படுகாயமடைந்தனர்.

நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் மீது லாரி மோதியதில் மூவர் படுகாயம் அடைந்தனர்.

குமாரபாளையம் அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் மீது லாரி மோதியதில் மூவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு முதல் சேலம் கோவை நெடுஞ்சாலை செங்கப்பள்ளி வரை தினமும் ரோந்து சென்று கண்காணித்து வரும் ரோந்து வாகனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பூர்ணசந்திரன், 27.

நேற்று அதிகாலை 12:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, குஜராத் டைல்ஸ் எதிரில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை ஓரமாக நிறுத்தச்சொல்லி, பூர்ணச்சந்திரன் சொல்லிகொண்டிருந்தார்.

ரோந்து வாகனத்தில், அதிகாரிகள் ராஜேஷ் தயாண்டியா பகத், 27, அருண்குமார், 27, ரவிகணேஷ், 31, ஆகிய மூன்று பேரும் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் சேலத்திலிருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற பாரத் பென்ஸ் லாரி, ரோந்து வாகனம் மீது மோதியதில், எதிர்திசையில் திரும்பி நின்றதுடன், வாகனம் சேதமானது.

இதில் அமர்ந்திருந்த அதிகாரிகள் மூவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டுள்ளனர்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுனர் மலப்புரத்தை சேர்ந்த முகமத், 39, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!