குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்றவர்  கைது
X
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம், ராஜம் தியேட்டர் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி எஸ்.ஐ. நந்தகுமார் மற்றும் போலீசார் நேரில் சென்று, மறைந்து நின்று கண்காணித்தனர்.

இதில், அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை அந்த கடையின் உரிமையாளர் செந்தில்குமார், 43, விற்பது தெரிய வந்தது. நேரில் சென்று கையும், களவுமாக பிடித்து, புகையிலை பொருட்கள், ஹான்ஸ் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார், செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!