இறந்த லிட்டில் ஜான் குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்தார் கதாநாயகன்

லிட்டில் ஜான் குடும்பத்தினருக்கு அலெக்சாண்டர் சவுந்திரராஜன் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் லிட்டில் ஜான் எனப்படும் தனசேகரன் (வயது 43.) இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். நடன குழுக்களில் நடனம் ஆடியும் வருகிறார்.
ஏப்.3ல் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் என்ற பகுதியில் உள்ளூர் திருவிழாவில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடியுள்ளார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுத்தவர் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. நேரில் வந்த டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் இவர் இறந்து விட்டார் என கூறியுள்ளார்.
இதனை வெங்காயம் படத்தில் கதாநாயகனாக நடித்த அலெக்சாண்டர் சவுந்திரராஜன் சென்னையில் ஊடகங்கள் வாயிலாக கண்டு அதிர்ச்சியடைந்தார். இறந்த தனசேகரன் குடும்பத்தாருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன், தன் அலுவலக பணியாளர்களை அனுப்பி வைத்து, லிட்டில் ஜான் பெற்றோர்களிடம் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். லிட்டில் ஜான் குடும்பத்தார், ஊர் பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் அலெக்சாண்டர் சவுந்திரராஜனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu