கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க  பொதுமக்கள் கோரிக்கை
X

kumarapalayam news - குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kumarapalayam news- குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

kumarapalayam news- குமாரபாளையம் கத்தேரி பிரிவில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து கோவை, திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கும், கல்வி பயிலவும் ஏராளமான பேர் கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதிலிருந்து சென்று வருகின்றனர். அதே போல் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பல அரசு அலுவலக பணிகளுக்காகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராளமான பேர் தினமும் அதே இடத்திலிருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர்.

தற்போது கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியதால், பஸ் நிறுத்தம் எங்கு என்று தெரியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க இந்த பகுதியில் இரு புறமும் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

நீண்ட வருட கோரிக்கையை ஏற்று கத்தேரி பகுதியில் மேம்பாலம் பணிகள் துவங்கியுள்ளது மகிழ்ச்சிதான். இது குமாரபாளையம் நகரின் நுழைவுப்பகுதி. எண்ணற்ற விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இங்குள்ள 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சாயமிடும் தொழில் செய்து வருகிறார்கள். எண்ணற்ற தொழிலாளர்கள் பல பகுதியில், பல ஊர்களில் இருந்து குமாரபாளையம் நகருக்கு வேலைக்கு வருகிறார்கள். இவர்கள் அவர்கள் பஸ் ஏறும் பகுதியில் இருந்து பஸ் ஏறும் போது , கத்தேரி பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் அங்கு பஸ் ஸ்டாப் இல்லை. அதனால் அங்கு பஸ் நிற்காது என்று கூறி, பஸ் ஏற அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆகவே, எண்ணற்ற தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கவும், விசைத்தறி, கைத்தறி தொழில் சிறக்கவும், கத்தேரி பகுதியில், மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் வரை, தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story