இந்திய கலாசாரம் அறிய வருகை தந்த புத்த துறவிகள்..!
இந்திய கலாசாரம் குறித்து அறிந்து கொள்வதற்காக புத்த துறவிகள் குமாரபாளையம் வந்தனர்.
இந்திய கலாசாரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக புத்த துறவிகள் குமாரபாளையம் வந்தனர்.
இந்திய கலாசாரம் என்பது பெரும்பாலான வெளிநாட்டவர்களால் விரும்பக்கூடியது. மதுரை, பழனி, மகாபலிபுரம், சிதம்பரம், தஞ்சை, திருவண்ணாமலை, அறுபடை வீடுகள் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் இருக்கும் ஊர்களுக்கு சுற்றுலாவாக பல வெளிநாட்டவர்கள் வருகிறார்கள்.
இந்திய காலசாரம் குறித்து அறிந்து கொள்ள பூட்டான் நாட்டிலிருந்து, திம்பு பகுதியை சேர்ந்த புத்த துறவிகள் 13 பேர் குமாரபாளையம் வந்தனர். குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள புத்தர் கோவிலில் வழிபாடு நடத்தினர். நகரில் உள்ள பல்வேறு கோவில்கள், முக்கிய இடங்கள் சென்றவர்கள் தமிழறிஞர்கள், ஆன்மீகவாதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
பவானி கூடுதுறை கோவிலுக்கு சென்று, காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தை கண்டு பரவசமடைந்தனர். கோவிலில் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. குமாரபாளையத்தில் செயல்படும் ஆஸ்ரமங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. கும்பாபிஷேகம் என்றால் அன்னதானம் வழங்குதல் அத்தியாவசியமானது என கூறப்பட்டது.
கும்பாபிஷேகம் என்றால் காவிரி ஆற்றில் தீர்தக்குடங்கள் எடுத்து வருதல், யாகா சாலை கூடங்கள் அமைத்து, பல கிட்ட யாக சாலை பூஜைகள் செய்தல், சாமிக்கு சக்தி கொடுத்தல், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், எனபது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், மகா குண்டம் இறங்குதல், அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றுதல், தேர் இழுத்தல்,வாண வேடிக்கை, வண்டி வேடிக்கை நடத்துதல் குறித்தும் கூறப்பட்டது.
சவுண்டம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடுதல், சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி அழைப்பு உள்ளிட்ட நிகழ்வில், அம்மனை, கத்தி போட்டவாறு அழைத்து வருவது குறித்து கூறப்பட்டது. மேலும் திருமண சடங்குகள் உள்ளிட்ட பல விபரங்கள் குறித்தும் கூறப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu