குமாரபாளையத்தில் டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

குமாரபாளையத்தில்  டி.என்.பி.எஸ்.சி.  இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
X

குமாரபாளையத்தில் டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பினை ஈரோடு மாவட்ட மதுவிலக்குபிரிவு டி.எஸ்.பி. சண்முகம் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம், பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் அபெக்ஸ் சங்க தலைவர் விடியல் பிரகாஷ் தலைமை வகிக்க, ஈரோடு மாவட்ட மதுவிலக்குபிரிவு டி.எஸ்.பி. சண்முகம் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். டாக்டர் நடராஜன், அபெக்ஸ் நிர்வாகிகள் முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, கவுன்சிலர் புருஷோத்தமன், அபெக்ஸ் சங்க நிர்வாகி ஈஸ்வர், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ் கூறும்போது படித்த இளைஞர்கள், இல்லத்தரசிகள், உள்ளிட்டோர் இந்த டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி தருகிறார்கள் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!